தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், இரண்டு நாட்களுக்கு முன் தமிழகம் வந்த போது பிரதமர் மோடி தன்னைப்பற்றி தவறாக பேசினார் என்று குற்றம்சாட்டியுள்ளார். உதயநிதி வளர்ச்சி முக்கியமா? தமிழ்நாடு வளர்ச்சி முக்கியமா? என்று அவர் கேட்டார். என் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சியே முக்கியம். அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு ரூபாய் 120 கோடியாக உயர்ந்துள்ளது பற்றி அவர் பேச மாட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.