Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா நினைப்பது நடக்காது…! தளபதி ஸ்டாலின் விரட்டுவார் … வைகோ ஆவேச பேச்சு …!!

தளபதியின் ஆட்சிகாலத்தில் இந்தியை இங்கு நுழைய விடாமல் மீண்டும் விரட்டி அடித்தார்கள், 38-ல் விரட்டி அடித்தது போல, 48ல் விரட்டி அடித்தது போல, 65ல் ஓடியது இந்தி. அதே நிலைமையை நாம் உருவாக்குவோம் என வைகோ தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய வைகோ, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் போட்டுத் திணிகிறார்களே. இத்தனை உயிர்கள் பலி போயிற்றே, இத்தனை பேர் இரத்தம் சிந்தினார்களே, இத்தனை பேர் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தார்களே. கீழப்பழுவூர் சின்னச்சாமி அண்ணா பேசியதை நினைவில் வைத்திருந்து இந்த நெருப்பு அணையாது, நடராஜன் உடம்பை பற்றி எரிகின்ற நெருப்பு அணையாது என்பதை நினைவில் வைத்திருந்து.

1964-இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவில் மனைவி தூங்கிக் கொண்டிருக்கபோது மகள் திராவிடச் செல்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறியதை போல வந்து திருச்சி ரயில்வே நிலையத்திற்கு எதிரே தன்னைத்தானே பெட்ரோலை ஊற்றி வைத்துக் கொண்டு நெருப்பு வைத்துக்கொண்டு அந்த நெருப்பில் கருகி மடிந்தார்.

கீழப்பழுவூர் சின்னசாமியை பின் தொடர்ந்து சிவலிங்கம் சின்னசாமியோடு, அரங்கநாதன் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி, பீழமேடு தண்டபாணி என்று தங்கள் உயிர்களைத் தந்தார்கள். ஆகவே இதற்கு ஒரு தியாக வரலாறு இருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதற்கு இவ்வளவு பேர் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள். உயிர்களை தந்திருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்து விட்டோ அல்லது தமிழ்நாட்டில் நாம் திணித்து விடலாம் என்று அமித்ஷாக்கள் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

 

Categories

Tech |