Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா மகன் சொத்து பற்றி பேசவில்லை ஏன்?…. உதயநிதி ஸ்டாலின் கேள்வி….!!!

தமிழகம் வந்த பிரதமர் மோடி, அமித்ஷாவின் மகன் சொத்து மதிப்பு பற்றி பேச மாட்டாரா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அப்போது பிரதமர் மோடி உதயநிதி ஸ்டாலின் பற்றி தவறாகப் பேசியதால் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், உதயநிதி வளர்ச்சி முக்கியமா, தமிழ்நாடு வளர்ச்சி முக்கியமா என அமித்ஷா கேட்டார். என் வளர்ச்சியை விட தமிழக வளர்ச்சியே முக்கியம். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு 120 கோடியாக உயர்ந்துள்ளது பற்றி அவர் பேச மாட்டாரா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |