தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அவர், திடீரென காரிலிருந்து இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து அப்படி நடந்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டன.
அதனைக் கண்ட காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்தினர். மேலும் ட்விட்டரில் GoBack Amitshah டிரெண்டாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.