Categories
மாநில செய்திகள்

அமித்ஷா வருகை…1 மணி நேரம் சிக்னலில் தவித்த ஆம்புலன்ஸ்… !!!

அமித்ஷா வருகையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் 1 மணி நேரம் சிக்னலில் ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமித்ஷா சென்னை வருகிறார் என்பதற்காக வாகனங்கள் வெகுநேரமாக சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் சென்னை மீனம்பாக்கத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் சிக்னலில் நிற்கின்றன. இதற்கிடையே ஒரு ஆம்புலன்ஸ் வேறு மாட்டிக்கொண்டு நிற்கிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, பாஜக ஆட்சியா என்பதே சந்தேகமாக இருக்கிறது” என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

தொடர்ந்து பேசும் அவர், ” இதை பார்க்கும்போது பயமாக இருக்கிறது . அமித்ஷா சென்னை வந்துள்ளதால் என்ன நடக்கிறது என்பதை சமூக வலைதளங்களில் பரப்புங்கள் என்று கோரிக்கை வைப்பதோடு முடிகிறது அந்த வீடியோ. வீடியோவில் அவர் முகத்தை காட்டவில்லை பெயர் உள்ளிட்ட விபரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

உண்மையில் அவ்வளவு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதா அல்லது அந்த நபர் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அந்த வீடியோவை எடுத்து பரப்பியுள்ளாரா என்ற உறுதியான தகவல்கள் தெரியாவிட்டாலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |