ஹாலிவுட் கடந்த 1994 ஆம் வருடம் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் டாம்ஹாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்திருக்கின்றார். மேலும் கரீனா கபூர் நாக சைதன்யா போன்றோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.
ஷாருக்கான் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கின்றார். அத்வைத் சந்தன் இயக்கியிருக்கின்ற இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் லால் சிங் சத்தா திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லால்சிங் சத்தா படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயந்தி மூவிஸ் தமிழக முழுவதும் வெளியிட இருக்கின்றது. இந்த சூழலில் இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. ஐக்யு அளவு குறைவாகவும், இரு கால்களும் சரியில்லாமல் இருக்கும் ஒரு மனிதன் வாழ்வில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை மையமாக வைத்து வெளியாக இருக்கின்ற இந்த ட்ரெய்லர் இணையதளத்தில் வைரலாக ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகின்றது.