Categories
சினிமா

அமீர்கானை தொடர்ந்து பிரபல நடிகருக்கு கிளம்பிய எதிர்ப்பு…. எதற்காக தெரியும்?….. தீயாய் பரவும் செய்தி….!!!!

ஹாலிவுடில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஷாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. டாம் ஷாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாகசைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிஉள்ளது. சமீபத்தில் சலிப்பு தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று எனது மனைவி சொன்னார் என்று அமீர்கான் சில வருடங்களுக்கு முன் பேசிய வீடியோக்களை தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவரது ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்கும்படி வற்புறுத்தினர். இந்நிலையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் ‘லால் சிங் சத்தா’ படத்தை பார்த்து விட்டு படம் சிறப்பாக உள்ளது என்றும் அனைவரும் இந்த பார்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து ரித்திக் ரோஷன் நடித்து திரைக்கு வர உள்ள விக்ரம் வேதா படத்தை புறம்பணிக்கும்படி இணையதளத்தில். ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதோடு அமீர்கான் படத்தை ஆதரித்த விளைவை சந்திக்க தயாராகுங்கள் என்று ஹிருத்திக் ரோஷனை கண்டித்து பல பதிவுகள் பதிவிட்டு வருகிறார்கள். இது திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |