ஜூனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகும் மகாராஜா படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இதையடுத்து இவர் தமிழில் 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது இவர் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் நடித்துள்ளார் .
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகன் ஜூனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகும் மகாராஜா படத்தில் நடிகை ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கும் இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது .