Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்….. அரை இறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஷபலென்கா….!!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவிடம் மோதினார். இதில் இகா 6-3, 7-6 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார். இந்த முறையும் அவரது முதல் அரையிறுதி கனவு கலைந்தது.அதனைத்தொடர்ந்து மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா-கரோலினா பிளிஸ்கோவா மோதினார்கள். இதில் ஷபலென்கா 6-1, 7-6  என்ற நேர் செட் கணக்கில் 22-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

அவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஒன்ஸ் ஜாபியுர்-கரோலின் கார்சியா, இகாஸ்வியா டெக்-ஷபலென்கா மோதுகிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 9-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் -பிரான்செஸ் டியாபோ மோதினார்கள். இதில் டியாபோ7-6 (7-3), 7-6, (7-0), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 22-வது வரிசையில் உள்ள அவர் 4-வது சுற்றில் முன்னணி வீரரான ரபெல் நடாலை வீழ்த்தி இருந்தார். தற்போது ருப்லெவை தோற்கடித்து உள்ளார். டியாபோ முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது. ரூப்லெவின் முதல் அரை இறுதி கனவு தகர்ந்தது. மேலும் அவர் 6-வது தடவையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார். டியாபோ அரை இறுதியில் அல்காரஸ் அல்லது சின்னரை சந்திக்கிறார்.

 

 

Categories

Tech |