Categories
உலக செய்திகள்

அமெரிக்காஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு வழங்க திட்டம் ..!எத்தனை டோஸ்கள் தெரியுமா ?

மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில்  4 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோ அங்கீகாரம் அளித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா ஃபைசர்,ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது இருந்தாலும் அஸ்ட்ராஜெனேகா  தடுப்பூசிகளை அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது. இதனாலேயே  7 மில்லியன் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி டோஸ்களில் 2.5 மில்லியன் மெக்சிகோவிற்கும், 1.5 மில்லியன் கனாடாவிற்கும் வழங்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Categories

Tech |