அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது .
அமெரிக்காவிடமிருந்து கூடுகள் தொலைவு சென்று தாக்கும் வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் அண்மையில் வாங்கியது. அந்த குண்டுகளை அமெரிக்காவின் m777 நவீன ரக பீரங்கி மூலம் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவம் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்தது. ஜெனரல் ரவி பிரசாத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீரங்கி மூலம் 30 கிலோமீட்டர் வரையிலான இலக்கையும் தாக்க முடியும் .ஒரு நிமிடத்தில் 5 ரவுண்டுகள் தாக்குதல் நடத்தலாம் எடை குறைவு என்பதால் மலைப்பாங்கான இடத்தில் எளிதாக பீரங்கியை கொண்டு செல்ல முடியும் என்பதுடன் ஹெலிகாப்டர் மூலம் தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் சென்று தாக்க முடியும்.