அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணமாக கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 சதவீத விமான சேவைகள் சீனா நிறுத்தம் செய்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு செல்லும் 26 விமானங்களில் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இதன்படி ஷாயாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போன்ற 26 விமானங்களில் சேவையை செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கொரோனாவின் காரணமாக அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தம் செய்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் இருந்து 19 விமானங்களில் சேவையும் நியூயார்க்கில் இருந்து 7 சீனா கிழக்கு விமானங்களில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ளது. ஆனால் அமெரிக்காவிலிருந்து புறப்படும் போது கொரோனா தொற்று இல்லாத பயணிகளுக்கும் சீனா சென்ற பிறகு தொற்று உறுதி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது.
Categories