Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் கருத்து இரும்பு கவசம்” நான்சி பெலோசியின் அதிரடி…. கடும் கோபத்தில் சீனா….!!!

நான்சி பெலோசி தைவானுக்கு சென்று விட்டு அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார்.

சீனாவில் இருந்து தைவான் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டு பிரிந்து சென்றது. ஆனால் சீனா தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி என்று கூறி வருகிறது. இந்த சூழலில் தைவானின் ஜனநாயக அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்வதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.

ஆனால் தன்னுடைய பயணத்தில் உறுதியாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து தைவானுக்கு விமானத்தில் புறப்பட்டார். இந்த விமானம் தைவான் நாட்டின் எல்லைக்குள் சென்றவுடன் தைவான் நாட்டின் போர் விமானங்கள் நான்சி பெலோசியின் விமானத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் வானில் வலம் வந்தது. இந்த சூழலில் சீன நாட்டின் போர் விமானங்களும் தைவானின் எல்லைக்குள் பறந்தது. இந்த பதட்டமான சூழலில் தைவான் தலைநகரில் நான்சி பெலோசியின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

மேலும் நான்சி பெலோசி தைவான் ஜனநாயக அரசுக்கு ஆதரவு தருவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது எனவும், தைவான் நாடு பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் தங்களுடைய வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றிய கருத்தில் உறுதுணையாக இருந்து வளர்ந்து வரும் போது நாடாக இருக்கிறது எனவும், உலக நாடுகளில் ஜனநாயக பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் கருத்து இரும்பு கவசம் போன்று இருக்கும் எனவும் கூறினார். இவருடைய பேச்சால் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் விரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |