Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா. பொதுச்செயலாளர்…. குற்றம் சாட்டும் வடகொரியா வெளியுறவு மந்திரி….!!!!

ஐ.நா. பொதுச் செயலாளர் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்  தீர்மானங்களை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல் கடந்த 18-ஆம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்காவை நோக்கி அனுப்பி சோதனை செய்துள்ளது. ஆனால் அந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது. மேலும் இந்த சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது . இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எந்த ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை எடுப்பதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு வடகொரியா வெளியுறவு மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐ.நா. சாசகத்தின் நோக்கம் கோட்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற  தன்மை, சமத்துவம் ஆகியவற்றை பேணுவதற்காக தனது சரியான பணியை மறந்து மிகவும் இழிவான அணுகுமுறையை ஐ.நா. பொதுச் செயலாளர் எடுத்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மேலும் வட கொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஐ.நா. பொதுச் செயலாளர் கவனிக்காதது அவர் அமெரிக்காவின்  கைப்பாவை  என்பதை தெளிவாக காட்டுகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |