அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் வாசிங்டனிலிருந்து நேற்று அட்லாண்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைப் பற்றி ஆசியா அமெரிக்கா சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது விமானத்தின் படிக்கட்டில் அவசர அவசரமாக ஏறும்பொழுது ஜோ பைடன் முதல் தடவை தடுமாறி கீழே விழுமாறு சென்றார் அதன்பிறகு சமாளித்து மீண்டும் படியேற முயன்ற போது இரண்டாவது முறையாகவும் தடுமாறினார் தொடர்ந்து அவசரமாக ஏறும் பொழுது கடைசி முறையாக படிகட்டில் தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார்.
இந்நிலையில் வேகமாக எழுந்து வலது முழங்காலை தேய்த்துக்கொண்டு எதுவும் தெரியாதது போல விமானத்தின் கதவருகே சென்று ஒரு சல்யூட் அடித்துவிட்டு விமானத்திற்கு உள்ளே சென்று விட்டார். ஜோ பைடன் இரண்டு முறை தடுமாறி யும் மூன்றாவது முறை கீழே விழுந்த போதும் எவரும் வந்து அவருக்கு உதவி செய்வது போல் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஊடகங்களில் எதிலும் முக்கியபடுத்தவில்லை. ஆனால் வெளிநாட்டு ஊடகங்களில் ஜோ பைடன் கீழே விழும் வீடியோ பெருமளவில் பரவி வருகிறது .
இதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை வட்டாரமோ விமானம் ஏறும் பொழுது காற்று வேகமாக வீசியதால் கால் தடுமாறியதாக கூறியுள்ளனர். இதனிடையில் சமீபத்தில் தான் நாயை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டதும் குறிப்பிடதக்கது. அவ்வப்போது இவர் பேச்சிலும் தடுமாற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதுடைய ஜனாதிபதி ஜோ பைடன் தான் அவருக்கு தற்போதைய வயது 78 ஆகும்.