அமெரிக்காவின் தடுப்பூசியை குறைவான வெப்பநிலையில் இந்தியாவில் வைத்து சேகரிப்பது மிகவும் கடினம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியாவில் தடுப்பூசிகள் அனைத்தும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மட்டுமே சேமித்து வைக்கப்படுகின்றன.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் குளிர் சங்கிலியை பாதுகாக்க தடுப்பூசிகளை வைத்திருக்கும் மிகக் குறைந்த பட்ச வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி மட்டுமே. ஆனால் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை சேமித்து வைக்க 70 டிகிரி செல்சியஸ் தேவைப்படுகிறது. கிரே இந்தியா போன்ற வளரும் நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. சிறிய நகரங்களில் இதுபோன்ற தடுப்பூசியை வைத்து சேகரிப்பதும், பராமரிப்பதும் மிகவும் கடினம்” என்று அவர் கூறியுள்ளார்.