அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் சட்டமன்ற விவரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி மந்திரியாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மை தலைவராகவும் இருந்துள்ளார். அவர் கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். அதிபரின் நுண்ணறிவு ஆலோசக வாரியத்திற்கு நியமிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பேரழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.