கொரோனா தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் குறித்த ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் தென்மாவட்டங்களில் ஜாதி கலவரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும் போலீஸ் லாக்கப் மரணம் நடந்து கொண்டு இருக்கின்றது. நிவாரணம் வழங்குவதில் சாதிப்பாகுபாடு இருப்பதாக கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு தமிழக முதல்வர், இது தவறான கருத்து. விரும்பத்தகாத சம்பவம், வேதனையான சம்பவம் நடந்துள்ளது. யார் தவறு செய்தார்களோ ? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது எல்லா ஆட்சி காலத்திலேயும் அங்கங்கே ஓன்று நடந்து கொண்டு தான் இருக்குது. உலகளவிலும் நடந்துகொண்டது தான் இருக்கின்றது. அமெரிக்காவில் கூட நடந்துள்ளதல்லவா ? இப்படி சிலபேர் செய்கின்ற தவறான செயலால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்து.
இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விரும்பத்தகாத சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லோருமே மனிதர்கள் அவர்களை மனிதராக நடத்த வேண்டும் அதுதான் எங்க அரசின் விருப்பம் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.