Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிலேயே இவருக்கு தான் வயசு அதிகம்…. மொத்தம் 120 எள்ளு பேரக்குழந்தைகள்…. பல வரலாற்று நிகழ்வை கடந்த மூதாட்டி….!!

அமெரிக்காவில் 116 வயதாகின்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் வட கரோலினாவில் 116 வயதாகும் ஹெஸ்டர் போர்டு என்ற மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி திடீரென்று உயிரிழந்தார். மேலும் 116 வயதாகும் இந்த மூதாட்டி தனக்கு 14 வயது இருக்கும் போது ஜான் போர்ட் என்ற வாலிபரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் 12 குழந்தைகளுடனும், 68 பேரக்குழந்தைகளுடன், 125 கொள்ளுப்பேரக்குழந்தைகளுடனும், 120க்கும் அதிகமான எள்ளுப்பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்வை கழித்துள்ளார்.

மேலும் இவருக்கு அமெரிக்காவிலேயே வயதான பெண் என்ற பெருமையும் உண்டு. அதோடு இந்த மூதாட்டி ஸ்பானிஷ் காய்ச்சல், குடிசார் உரிமை இயக்கம், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் போன்ற பல வரலாற்றை கடந்த பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |