அமெரிக்காவில் இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீட்டித்து வருகிறது. இப்போது இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டகல் சம வேலைவாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினை சிங் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் தலைமை நிதி அதிகாரி ஆக இருக்கிறார்.
கல்பனா கோட்டகல் பன்முகத்தன்மை மற்றும் சட்ட நிபுணர் ஆவார். மனித உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்து உரிமையற்றவர்களை பிரதிநிதிப்படுத்துபவர் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. வினை சிங்கை பொருத்தமட்டில்,இவர் சான்றளிக்கப்பட்ட ஆடிட்டர். மேலும் இவர் நீதி மற்றும் மூலோபாய துறைகளில் கால் நூற்றாண்டு அனுபவம் மிக்கவராக இருக்கிறார். ஒபாமா நிர்வாகங்களில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.