Categories
உலகசெய்திகள்

அமெரிக்காவில் உயர்மட்ட தலைவர்களுடன்… மத்திய நீதி மந்திரி இரு தரப்பு பேச்சுவார்த்தை…!!!!!

அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக மத்திய நிதி மந்தி நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்காக பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டரில் கூறியுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற இந்திய மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் நிதி இரவு சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தரும்படி எல்லனுக்கு மத்திய நிதி மந்திரி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

அதற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க நீதிமந்திரியாக இந்தியாவில் நடைபெற இருக்கும் பொருளாதாரம் மற்றும் நிதியுறவு கூட்டத்தில் ஒன்பதாவது நட்புறவு கூட்டத்தில் பங்கேற்க கூடிய தனது முதல் இந்திய பயணம் அமையும் என எல்லன் தெரிவித்துள்ளார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் இந்த பயணத்தில் ஜப்பான் தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூஸிலாந்து மற்றும் ஈரான் போன்ற பல்வேறு நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் நிதி மந்திரி பங்கேற்கின்றார் என கூறப்பட்டுள்ளது. இதை போல் சர்வதேச நிதி ஆணையம் உலக வங்கி ஜி 20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர் போன்றோருக்கான வருடாந்திர கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கின்றார் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி மந்திரிகள் மற்றும் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தையில் நேற்றைய தினம் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து எகிப்து நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு மந்திரி ராணியா அல் மஷாத்துடன் இரு நாடுகளின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய பார்வைகளை மதிய  மந்திரி பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் பின் நெதர்லாந்து நீதிமன்றம் சிக்ரித் கான் உடனான சந்திப்பில் பல்வேறு பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விவகாரங்கள் பற்றியும் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தென்கரிய துணை பிரதமர் மற்றும் நிதி மந்திரியான சூ கியூங் ஹோ உடனான சந்திப்பில் ஜி20 தலைமைத்துவத்திற்கு இந்தியாவிற்கு ஆதரவு தடும்படி மத்திய மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இதன்பின் முன்னணி வர்த்தக தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இந்தியாவின் கொள்கை மற்றும் முக்கியத்துவங்கள் பற்றி சுட்டிக்காட்டி பேசியது மட்டுமல்லாமல் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா அடையாளப்படுத்தும் விதமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான திட்டமிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

Categories

Tech |