Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்..! புதிய வரலாறு படைத்தார் !

அமெரிக்காவின் மிகவும் உயர்ந்த பதவிக்கு   தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(52)  நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  2013ல் இந்த  நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார்.   தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பத்பநாபன் கணித பேராசிரியராக பணிபுரிந்தார். அதே பல்கலைக்கழகத்தில் தாயார் சரோஜா கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்தார்.

முதலில் சண்டிகாரில் வசித்து வந்த ஸ்ரீநிவாசனின் குடும்பம் 1960ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இந்நிலையில்  தனது பட்டபடிப்பை அமெரிக்காவில் முடித்து வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.

கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால்  நியமிக்கப்பட்டார். மேலும் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஸ்ரீநிவாசனின் பெயர் இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டது.

தெற்கு ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பது இதுவே  முதல் முறை அந்த வகையில்  தமிழரான ஸ்ரீநிவாசன் புதிய வரலாறு படைத்துள்ளார்.

Categories

Tech |