அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகளை மீட்க கோரி சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது வாஷிங்டன் நகரில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தை சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர் உள்ளிட்ட புராதன சிலைகள் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து திருடப்பட்ட சுமார் 15,000 கோடி மதிப்பிலான 3,000கும் மேற்பட்ட சிலைகள் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும்அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.