Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட பணவீக்கம்…. வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுமா … வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன ..?

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வங்கிகளில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது சரியாக இருக்கும் என பெடரல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பணவீக்கம் காரணமாக பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 2021 ல்6.8 சதவீதத்தை எட்டியது 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த விகிதத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த  2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு நுகர்வோர் விலை ஏழு சதவீதம் உயர்ந்துள்ளது எனவும்,  இத்தகைய உயர்வு 1982  ஆம்  ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் ஏற்பட்டுள்ளதாக  பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

கொரோனா  தொற்று  பரவல் காரணமாக  அமல்படுத்தப்பட்ட  ஊரடங்கு  காரணமாக  சந்தையில் தேவை மற்றும் விற்பனைக்கு இடையில் நிலவும் சமனில்லாத தன்மை, மேலும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது போன்ற பல்வேறு காரணங்களால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .

கொரோனா  வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது   முதலே  வட்டி விகிதங்கள் குறைந்த அளவில் பெறப்படுகின்றன. இதனிடையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மத்திய வங்கியின் கூட்டத்தில் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வங்கிகளில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது சரியாக இருக்குமென பெடரல் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மட்டும் மூன்று முறை வட்டி விகிதங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  பெடரல்  வங்கி தலைவர்  ஜெரோமி பால்  கூறுகையில், இப்படியே விட்டால் நிலைமை மிகவும் மோசமாக வாய்ப்புள்ளதாகவும்,  அதற்கு கொள்கையின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |