அமெரிக்காவில் கொரோனாவின் வீரியம் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து தாண்டியுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,77,528 ஆகும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. அமெரிக்காவில் தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து ஆயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1952 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.