Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் குளிர்… இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்… மக்கள் வேதனை…!!!!!!

அமெரிக்காவில் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பி உள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர் கால புயலால் நேற்று 15 லட்சம் பேர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு சூறாவளி கனமழை அல்லது கடுமையான பணியை தோற்றுவிக்க கூடியதாகும். மேலும் இந்த வெடிகுண்டு சூறாவளி கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்கிறது. இந்த குளிர்காலம் சூறாவளி நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் அவதி அடைந்து வருகின்றனர். அமெரிக்காவில்  இந்த குளிர்கால சூறாவளியால் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்  குளிர்கால புயலால் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த வருடமும் களை கட்டாமல் இருப்பதனால் மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர்.

Categories

Tech |