அமெரிக்காவில் கமலா ஹாரிஸின் துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றியை பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் துணை செய்தித்தொடர்பாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான சபரீனா சிங் என்பவர் தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்ற குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்ற பின்பு அவரின் துணை செய்தி தொடர்பாளராக சபரீனா சிங் பணியாற்றவுள்ளார் என்று தெரிவித்துள்ளது. மேலும் சபரீனா சிங் பைடன்-ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரக் குழுவின் செய்தி தொடர்பாக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சபரீனா சிங் மைக்கேல் ப்ளூம்பர்கின் அதிபர் தேர்தல் பிரச்சார குழு செய்தி தொடர்பாளராக, மற்றும் கோரி புக்கரின் அதிபர் தேர்தல் பிரச்சாரக் குழுவின் செய்தி தொடர்பாளர் போன்ற பதவிகளை வகித்து வந்துள்ளார். மேலும் இதற்கு முன்பு குடியரசுக் ட்சி தேர்தல் குழுவில் தகவல் தொடர்பின் துணை இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.