அமெரிக்காவில் காரை கடத்த முயன்ற சிறுமிகளிடமிருந்து காரை காப்பாற்ற முயன்றவர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 66 வயதான முகமது அன்வர் என்பவர் உபேர் இட்ஸ் நிறுவனத்திற்காக கார் ஓட்டி கொண்டிருந்திருக்கிறார் .அப்போது திடீரென்று காருக்குள் தென்கிழக்கு வாஷிங்டன் டிசியை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் போர்ட் வாஷிங்டன் என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இருவரும் அன்வரை மின்சாரம் கொடுக்கும் கருவியால் தாக்கி காரை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
சிறுமிகளிடமிருந்து காரை காப்பாற்ற முயன்ற அன்வரை சிறுமி காரை வேகமாக செலுத்தியதால் கார் சாலையோர தடுப்பில் மோதி அன்வர் தூக்கியெறியப்பட்டார் .பிறகு படுகாயங்களுடன் அன்வர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமிகளின் இந்த செயலை பார்த்துக்கொண்டிருந்த தேசிய படை சேர்ந்த இருவர் அவர்களை தப்பவிடாமல் போலீசுக்கு தகவல் அளித்து பிறகு போலீஸ் வந்து அவர்களை கைது செய்தனர் .
மேலும் கைதுசெய்யப்பட்ட சிறுமிகளை இம்மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.