Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம்… 64 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 இலட்சத்தை எட்டியுள்ளது.

மேலும் அந்நாட்டில் கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதே சமயத்தில் பாதிப்பில் இருந்து 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Categories

Tech |