உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்திருக்கிறது. கொரோனாவால் சில பிரச்சினைகள் இருக்கிறது. அதனை ஒழிப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். ஆனால் தொற்றுநோய் முடிவடைந்து விட்டது. மேலும் நீங்கள் கவனித்தால் இங்கு யாரும் மாஸ்க் அணியவில்லை எல்லோரும் நல்ல நிலையில் இருப்பது போன்று தெரிகிறது. அதனால் காலநிலை மாறுகின்றது என நினைக்கிறேன் அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என நான் நினைக்கின்றேன். கடந்த வாரம் கொரோனா தொற்றிலிருந்து இறப்புகளின் எண்ணிக்கை மார்ச் 2020 க்கு பின் வெகுவாக குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Categories