ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக உலகளவில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஆனது மார்ச் மாதம் அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரதமர் ஜோ பைடனின் சிறந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசி பெரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவில் மொத்தம் 94.8 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பியாவில் உள்ள 27 நாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என ஐரோப்பாவின் ஒன்றிய தலைவர் அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் தடுப்பூசி போடப்பட்டவர்களின் முன்னேற்றத்தை போலவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முன்னேற்றம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா செல்வதற்கான தடையை நீக்குவது குறித்து அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் மறுபரிசீலனை செய்வது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.