Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டி….. சாதனை படைத்த தமிழக பெண்….!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் “மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” அழகி போட்டியில் நளினி கடந்த ஆண்டு கலந்து கொண்டார். இந்த போட்டியில் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் நளினி மட்டுமே. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் நளினி 2021-ஆம் ஆண்டுக்கான “மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” என்ற பட்டத்தையும், “கிளாமர் அச்சீவர்” என்ற துணை பிரிவு பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார்.

இதை தொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி நகரில் நடைபெற்ற மிஸ் உலக அழகி போட்டியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இதில் நான் 14 வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்களுடைய நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி “Ms. International World People’s Choice Winner 2022” என்ற பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Categories

Tech |