அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த ஒரு நபர், கோர்ட்டின் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றார்.பின்னர் அவர் திடீரென தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் அளித்த தகவலின்பேரில், மருத்துவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கோர்ட்டுக்கு அருகே தரையிறக்கப்பட்டது. பின்னர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் அங்கிருந்து சென்றது. தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் யார்? எதற்காக அவர் சுப்ரீம் கோர்ட்டில் தீக்குளித்தார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.