அமெரிக்காவில் கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள லூசியானா கடற்கரையில் 129 அடி ‘சீகார் பவர்’ எனும் வணிக கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது .இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் .மேலும் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தளபதியான வில்சன் கூறுகையில் ,கப்பலில் மொத்தம் 19 பேர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அமெரிக்க கடலோர காவல் படையுடன் இணைந்து நான்கு தனியார் கப்பல் மற்ற 12 பேரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வில்சன் கூறியுள்ளார்.