அமெரிக்காவில் விமானம் மூலம் வணிக வளாகத்தை தகர்க்க முயற்சி செய்யும் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணம் டூபலோ நகரில் உள்ள வால்மார்க் அங்காடியை விமான மூலம் தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29 வயது இளைஞர் உடன் டூபலோ காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்க் அங்காடியில் இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
நிலைமை சீராகும் வரை வால்மார்க் அங்காடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த விமானி விமானத்தை திருடி சென்றது டுபலோ காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. 2001இல் நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டதை போல நடந்துவிடக் கூடாது என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Breaking – Here’s the small plane that is being flown by 29 year old who stole this plane & is threatening to crash it into #Walmart. Polices ,ambulances ,& fire trucks are everywhere. Everything is shutdown and store evacuated!#Mississippi #Plane #Hijack #America #News pic.twitter.com/5GAFyzbZ7H
— Rohit Sharma 🇺🇸🇮🇳 (@DcWalaDesi) September 3, 2022