Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனம்…. 6000 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி…. பீதியில் மக்கள்….!!!

குரங்கம்மை வைரஸ் தொற்று பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்து வந்த நிலையில் தற்போது குரங்கமை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடியை அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் 6000-க்கும் அதிகமானோர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கும் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கமை வைரஸ் அமெரிக்காவில் அதிக அளவில் பரவி வருவதால் அந்நாட்டின் மாகாணங்கள் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்து வருகிறது. அதன்படி இல்லியான்ஸ், நியூயார்க் மற்றும் கலிபோர்னியா போன்றவைகள் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளது. மேலும் அந்நாட்டில் குரங்கம்மை வைரஸ் பொது சுகாதார அவசர நிலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |