பிரபல நாட்டில் வண்ண பலூன் திருவிழா நடைபெற இருக்கிறது.
அமெரிக்க நாட்டில் உள்ள நியூ ஜெர்சி நகரம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் வண்ண பலூன் திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டிலும் வண்ண பலூன் திருவிழா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 39-வது பலூன் திருவிழாவில் 1,75,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பலூன்களில் வெப்ப காற்று நிரப்பப்பட்டு வானில் பறக்க விடப்படும். இந்த வண்ணமயமான பலூன்கள் வானத்தில் பறப்பதை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மேலும் வண்ண பலூன் திருவிழாவிற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.