Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு… 2,000-க்கும் மேற்பட்ட விமானம் ரத்து… பயணிகள் வேதனை…!!!!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு  ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்வாட்டி வதைத்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள், கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 270 விமானங்களை ரத்து செய்துள்ளது.

மேலும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி பல மணி நேரம் தாமதமாக வந்தடைகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |