Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத புயல்… 32 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின் சீர் செய்யும் பணி நடைபெற்றது. மக்கள் கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில் கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்களில் சென்றவர்கள் சிலர் உறை பனியால் காருக்குள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ சர்வதேச விமான நிலையங்கள் உட்பட விமான சேவை பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 5000 அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த வானிலை தொடர்பான மாற்றத்தால் பல இடங்களில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியது. மேலும் அமெரிக்காவில் கடுமையான சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பலர் வாகனங்களுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

Categories

Tech |