கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மோசமான வானிலை போன்ற காரணங்களால் 3,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவைகள் வார இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில், “ஆர்லண்டோ, போர்ட் லாடர்டேல், புளோரிடா ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை புளோரிடாவில் வீசிய புயலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் தொழில்நுட்ப சிக்கல் மற்றும் மோசமான வானிலை காரணமாக கடந்த சனிக்கிழமை 1,000 விமானங்களை ரத்து செய்ததாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.