அமெரிக்காவுக்கு சீனா மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நான்சி பெலோசி இருக்கிறார். இவர் தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தைவானுக்கு செல்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த 1997-ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவிலிருந்து ஒருவர் தைவானுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானுக்கு அமெரிக்காவில் இருந்து சென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது. இது தேவையற்ற மிரட்டல் என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.