பிரிட்டனின் பயணத்தடை சிவப்பு பட்டியலில் 33 நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை சேர்ப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகள் பிரிட்டனின் பயணத்தடை பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் சேர்க்கப்பட்டால் இரு நாடுகளிருந்து திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரை தவிர்த்து, மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்த இரு நாடுகளிருந்து பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கட்டணம் ஒரு நபருக்கு 1,750 பவுண்டு வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. நேற்று பிரிட்டன் போக்குவரத்து துறை சுகாதார அதிகாரிகளை ஸ்பெயினிலும், ,அமெரிக்காவிலும் புதிய வகை கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவாதிக்கபட்டன. இந்த வாரம் அமைச்சரவை இரு நாடுகளையும் சிவப்பு பட்டியலில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த முடிவை கொரோனா செயல்பாட்டு குழுவில் முடிவு செய்யும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.