Categories
உலக செய்திகள்

ஒடுக்கும் அமெரிக்கா…. திருப்பி அடிக்கும் ஈரான்… ஏவுகணைகளை அறிமுகம் செய்தது…!!

அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வேறு எந்த நாடுகள் மீதும் விதிக்காத அளவுக்கு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் விண்வெளி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் கண்டம் விட்டு கண்டம் பாயும்
இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்த ஏவுகணைகளுக்கு அமெரிக்க வான் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளிக் குழுவின் தலைவர் அபு மக்தி அல் முக்திஸ் ஆகியோரின் பெயரை ஈரான் இராணுவம் சூட்டி இருக்கிறது. நிலத்திலிருந்து செல்லக்கூடிய ‘தியாகி ஹஜ் காசிம்’ ஏவுகணை 1,400 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. கடலிலிருந்து செலுத்தக்கூடிய ‘தியாகி ஹஜ் மக்தி’ ஏவுகணை ஆயிரம் மடங்கு தாக்கும் திறனை கொண்டுள்ளது என ஈரான் ராணுவம் கூறியுள்ளது.

மேலும் இவற்றுடன் ஆளில்லா விமானங்களின் பயன்படுத்தப்படும் 4-ஆம் தலைமுறை டர்போ எஞ்சினையும் ஈரான் ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின் ‘ மிள் தடை’ அம்சத்தின் மூலமாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டி கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஈரான் புதிய ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |