Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை நெருங்கும் பேரழிவு… இயற்கை பேரிடர் அறிவிப்பு… ஜோ பைடன் வேதனை…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இயற்கைப் பேரிடர் பகுதியாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்குப் பகுதியில்  கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது.  பனிப்புயலானது  அதிகமாக இருப்பதால் வீடுகளிலும் சாலைகளிலும் பனி மூடப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவினால் மின்சார உற்பத்தியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் சுமார் 30 லட்சம் மக்கள் வீடுகளில் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர். குடிக்கும் குடிநீரும் பனியினால் உறைந்து போவதால் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தவித்து வருகின்றன. வீடுகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சனையால் உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள அங்காடிகளிலும், சந்தைகளிலும் விற்கப்படும்  உணவு  பொருட்கள் அனைத்தும் காலியாக உள்ளன. பால் ,பிரட் போன்ற உணவு பொருட்களை கடையில் வாங்கி உண்ண முடியாத அளவிற்கு மக்கள் பசியினால் வாடுகின்றனர். இந்த பனிபொழிவினால் குளிர் நிலவுவதால் இதை சமாளிக்க வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றும் போது வீடுகளில் தீப்பற்றிக் கொண்டது. சாலைகளில் பனிக்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது .ஜெனரேட்டர்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு வாயு வெளியேறி 60 பேர் உயிரிழந்தனர்.

இதனால் டெக்சாஸ் பகுதியை இயற்கை பேரிடர் பகுதியாக அமெரிக்கா அதிபர்  ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக வீடுகள் அமைத்துக் கொடுத்தும் , அவர்களின் வீடுகளை பராமரித்து அவர்கள் காப்பீடு செய்யாத  சொத்துக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் போன்ற நிவாரண உதவிகளை  அறிவித்தார் . இதற்காக டெக்சாஸ் பனிப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயக நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்சாண்டிரியா ஒகாசியோ ரூபாய் 21 கோடி நிவாரண நிதி வழங்கினார்.

Categories

Tech |