உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா காரணமாக அனைத்து நாடுகளும் பல இன்னல்களை சந்தித்து உள்ளது. பொருளாதார ரீதியாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அதையடுத்து 60 வயது முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 32.36 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா 32.33 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளது. எனவே அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதலிடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.