Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சீனா இடையேயான மோதல்… கடும் தீவிரம்…!!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகின்ற நிலையில் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்துள்ளது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வந்தது. மேலும் அந்த விவகாரம் பற்றி ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உட்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரத்தில் பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. இந்நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடையை அறிவித்தது.

அந்த 11 பேரில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த பொருளாதார தடை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறும் போது, “பட்டியலிடப்பட்டுள்ள இந்த 11 பேரும் ஹாங்காங் தொடர்பான பிரச்சினையில் மோசமாக செயல்பட்டவர்கள். சீனா தனது இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |