அமெரிக்கா தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இந்தியர்களுக்காக வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தலானது இந்த ஆண்டு இறுதியான நவம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அங்குள்ள மக்கள் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ஒன்று குடியரசுக் கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. தற்போது இரண்டு கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக வாக்குறுதி அளித்துள்ளார். அதில், நான் மட்டும் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனார். H1 விசாக்களை தடையை நீக்குவேன் என்றும், தற்போது இருக்கக்கூடிய அதிபர் டிரம்ப் இந்த ஆண்டு இறுதிவரை இந்தியர்களுக்கான H1 விசாக்களை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். எனது நிர்வாகத்தில் இந்த தடை இருக்காது என தெரிவித்துள்ளார். இவரது இந்த வாக்குறுதிக்கு இந்தியர்கள் சார்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.