Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: நைட் கிளப்பில் என்கவுண்டர்…. 2 பேர் பரிதாப பலி….. வெளியான தகவல்……!!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 10 நபர்கள் காயமடைந்தனர். அதாவது சிடார் ரேபிட்ஸ்-ல் உள்ள நைட்கிளப்பில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:27 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் இதுவரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை.

Categories

Tech |