ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் ஒரு ராணுவ விமான தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஈராக் பாக்தாத்திற்கு வடக்கே பலடில் உள்ள ஈராக் ராணுவ விமான தளத்தில் பல ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது .அந்த தாக்குதலில் ஒரு ஈராக் கான்ட்ராக்டர் காயமடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்யிருக்கும் தளம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத்தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறியுள்ளது.
ஈராக் அதிகாரிகள் இதுபோன்ற தாக்குதல் கடந்த காலத்தில் நடந்ததற்கு ஈரான் ஆதரவு பெற்ற சில குழுக்கள் பொறுப்பேற்றதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகளுடன் பணிபுரிந்த கான்ட்ராக்டர் ஒருவர் கடந்த வாரம் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2,500க்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் மற்ற வெளிநாட்டு படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் அறிவித்துள்ளது.