பிரபல நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நிலையை சர்வதேச நாணயத்தின் செயற்குழு பரிசீலனை செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முன்பு இருந்ததை விட கொரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் ஆனது சரிய தொடங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது.
ஆனால் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 3.7 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது 2.3 சதவீதம் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விரிவான பண வீக்கத்துடன், உயர்வேக மீட்சி அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் இடையே இடர்பாடுகளை ஏற்படுத்தும் எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பது அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.